அடுத்தடுத்து வரும் போன்கால்கள்!!! சிவசங்கரிக்கு கொடுக்கப்பட்ட பக்கா அசைன்மென்ட்... ஓஹோ இதுதான் ஸகெட்சா?

By vinoth kumarFirst Published Oct 17, 2018, 2:41 PM IST
Highlights

நாடளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி கொண்டிருக்கிறது. சூட்டோடு சூடா தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனும் அளவிற்கு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது அரசியல் சூழல்.

நாடளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி கொண்டிருக்கிறது. சூட்டோடு சூடா தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனும் அளவிற்கு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது அரசியல் சூழல். என்ன நடந்தாலும் சரி எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்திடனும்னு சில கட்சிகளும், இருக்கிற இடத்தை தக்கவைத்தாகனும் என சில கட்சிகளும் போராடி வருகின்றன. 

இந்த அரசியல் வியூகத்தில் யார் யார் எல்லாம் போட்டி அவர்களை எப்படி கவிழ்பது என்று காத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல் சாணக்கியர்கள். இதில் ஊடகங்கள் வேறு ஒரு பக்கம் யார் வகையாக மாட்டுவார்கள் என காத்துக்கொண்டிப்பதால், இம்முறை எல்லா கட்சிகளுமே தங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் கூட திமுக 7 முக்கிய புள்ளிகளின் பெயரை அறிவித்து இவர்களை தவிர யாருக்கும் ஊடகங்களில் பேட்டி அளிக்க உரிமை இல்லை என தெரிவித்திருக்கிறது. அதே சமயம் முன்னாள் செய்தி தொடர்பாளர் இளங்கோவனையும் அந்த பதவியில் இருந்து நீக்கி இருக்கிறது திமுக. 

ஆனால் இதை எல்லாம் மிஞ்சும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில். வழக்கறிஞர் சிவசங்கரி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இதுவரை செய்தி தொடர்பாளராக இருந்துவந்தார்.  தினகரனுக்கு ஆதரவாக  குரல் எழுப்பிவந்த இவரை தற்போது இந்த பதவியில் இருந்து மட்டுமல்ல கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கி இருக்கிறார் தினகரன். இதற்கும் காரணம் சமீபத்தில் சிவசங்கரி ஒரு தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டி தான். பேட்டியி அவர் ஒன்றும் தினகரனுக்கு எதிராக எதுவும் பேசிவிடவில்லை. சமீபத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என வந்த தீர்ப்பு குறித்து ஒரு தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது. 

இந்த விவாதத்தின் போது நேரலையில் பேசிய சிவசங்கரி பெண்கள் சபரி மலைக்கு செல்லலாம் எனும் தீர்ப்பிற்கு ஆதரவாக, காரசாரமாக பேட்டி அளித்திருக்கிறார். அவரின் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே கட்சி தலைமையில் இருந்து அவருக்கு போன் வந்திருக்கிறது. நிகழ்ச்சி முடிவில் என்ன என்று போனை எடுத்து பேசியவரிடம், தினகரனின் உதவியாளர் பிரபு பேசி இருக்கிறார். உங்கள யார் இப்படி இந்த விவாதத்தில கலந்துக்க சொன்னது.

கட்சியின் அனுமதி கேட்காம நீங்க எப்படி பேசலாம்? இந்த சபரி மலை விஷயத்தில் அண்ணன் தினகரனின் கருத்து என்ன என்று தெரியாமல் நீங்க இப்படி பேசி இருக்கீங்க. இதுவரை அவர் கூட இந்த சபரிமலை விஷயம் பத்தி கருத்து தெரிவிக்கலை. ஆகம விதிகளை மதிக்கும் அவருக்கு இந்த தீர்ப்பு விஷயத்தில சுத்தமா உடன்பாடு இல்லை. இது தெரியாம நீங்க பாட்டுக்கு பேசி இருக்கீங்களே என செம டோஸ் விட்டிருக்கிறார்.

 

இதனால் கடுப்பான சிவசங்கரியும் இது என் தனிப்பட்ட விஷயம் , ஒரு வழக்கறிஞரா உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவா, நான் என்னோட கருத்தை பதிவு செஞ்சிருக்கேன். இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா? நான் என்ன உங்க கட்சி அடிமையா என சாடி இருக்கிறார். அவர் தாறுமாறாக கேள்வி கேட்ட இந்த விஷயம அப்படியே தினகரன் காதுக்கு போயிருக்கிறது. இதனால் அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கி இருக்கிறார் தினகரன். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசங்கரிக்கு, ஆளுங்கட்சி தரப்பிலும், திவாகரன் தரப்பிலும் இருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வந்து கொண்டிருக்கிறதாம். 

இதில் சிவசங்கரிக்கு ஆதரவாக பேசிய தினகரன் “அவருக்காக என்னவெல்லாம் செஞ்சீங்க. எவ்வளவு தூரம் அவருக்கு ஆதரவா பேசினீங்க , கடைசியில உங்களையே வெளியே அனுப்பிட்டாங்க பாத்தீங்களா? இதை அப்படியே விடக்கூடாது. கண்டிப்பா பதிலடி கொடுக்கனும். அவரை நம்பி போனவங்க எல்லாரையும் இப்படி தான் அனுப்பிகிட்டிருக்காரு. கடைசியில அவர் மட்டும் தான் கட்சியில இருக்க போறார் ”என கூறி இருக்கிறார்.

வருத்தத்தில் இருந்த சிவசங்கரியும் ஆறுதல் சொன்ன திவாகரனுக்கு நன்றி தெரிவித்ததுடன், இப்படி கருத்து சொல்ல கூட தைரியமில்லாம இருக்குறவங்க எதுக்கு கட்சி நடத்தனும்? ஒரு விஷயத்தில் நிலைப்படு எடுக்க தெரியாம கருத்து சொல்ல தெரியாம இருக்குறவன் முட்டாளா தான் இருக்கனும். என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இந்த தருணத்தை சாதகமக்கி கொள்ள முயன்ற திவாகரனும் இந்த விஷயத்தை அப்படியே விட்டுடாதீங்க, நான் வேணும்னா பிரஸ் மீட் ரெடி பண்ணுறேன். தினகரனோட முகத்திரையை  ஊடகங்கள் முன்னாடி கிழிக்கனும் ,அப்போதான் சரிப்பட்டுவரும் என்று கூறி இருக்கிறார்.

இதையே தான் ஆளுங்கட்சி தரப்பிலும் கூறி இருக்கின்றனர். இதனால் இந்த இரு தரப்பினருமே சிவசங்கரிக்கு ஆதரவாக இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கும் நிலையில், விரைவில் பிரஸ்மீட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை எப்படி தான் சமாளிக்க போகிறார் நம்ம டிடிவி என அறிய, ஊடகங்களும் கூட இப்போதே தயாராகிவிட்டனர்.

click me!