வேட்பாளர்களாக அறிவித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர்கள் தற்போது வரை தேர்தல் பணிகளைத் தொடங்கவில்லை.
வேட்பாளர்களாக அறிவித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர்கள் தற்போது வரை தேர்தல் பணிகளைத் தொடங்கவில்லை.
கடந்த வாரம் நாள் நட்சத்திரம் பார்த்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தினகரன். இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு முடிந்தது. இறுதியாக நெல்லை தொகுதிக்கு வேட்பாளரை மாற்றியும் அறிவித்துவிட்டார் தினகரன். ஆனால் தற்போது வரை எந்தத் தொகுதியிலும் டிடிவி தினகரன் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதாவது பரவாயில்லை ஆனால் யாரும் பிரச்சாரம் என்று கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
தேர்தலுக்காக காத்திருப்பதாகவும் தேர்தலை கண்டு நாங்கள் அஞ்சவில்லை என்றும் வெற்றி எங்களுக்கு என்றும் செல்லும் இடமெல்லாம் தினகரன் நடித்து வருகிறார். ஆனால் தேர்தல் பணிகளை அவரது கட்சிக்காரர்கள் நல்ல வேட்பாளர்களை துவங்காதது அதிமுகவினரே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று விசாரித்தபோது பதிலாக கிடைத்தது பணம்தான்.
ஒரு எம்பி தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென்றால் தற்போதைய சூழலில் 30 கோடி ரூபாய் முதல் 40 கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அதிமுக மற்றும் திமுக ஆகிய முன்னணி கட்சிகளின் பட்ஜெட். இவர்களுக்கு நிகராக செலவழிக்காமல் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது என்று டிடிவி தினகரன் என்று நன்றாகத் தெரியும். அதேசமயம் டிடிவி தினகரன் அறிவித்துள்ள வேட்பாளர்கள் ஒருவர் கூட இந்த அளவிலான தொகையை செலவழிக்க தயாரானவர்கள் இல்லை என்றும் அவளுக்குத் தெரியும்.
ஆனாலும் டிடிவி தினகரன் வேட்பாளர்களை அறிவித்தது எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறித்தான் என்கிறார்கள். ஆனால் தற்போது வரை தினகரன் தங்களை பார்க்கவில்லை என்றும் தேர்தல் பணிகளுக்கு தேவையான விட்டமின் ப தற்போது வரை தங்களை வந்த அடையவில்லை என்றும் வேட்பாளர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே கையிலிருந்து எப்படி பணத்தை செலவழிக்க முடியும் என்று வேட்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். அவர் முதலில் பிரச்சாரத்தை துவங்கி விட்டோம் பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒருவரைப் பார்த்து மற்றொரு வேட்பாளர்கள் பணிகளில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இவர்களை எப்படி சமாளித்து தினகரன் கரையற்ற போகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.