
திருநெல்வேலி
திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டிடிவி தினகரனிடம், தம்பதி ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட தினரனும் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார். என்ன பெயர் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க...
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு தாழையூத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டதைது.
அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் குறிச்சி முக்கு, ஆசாத் சாலை, சந்தை திடல், வி.எஸ்.டி.பள்ளிவாசல், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், தருவை ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தமிழகத்தில் துரோக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.
நாம் அனைவரும் சாதி, மத வேறுபாடு இன்றி வாழ்கிறோம். நம்மிடையே பிரிவினையை உருவாக்கி அரசியல் லாபம் பெறும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எந்த ஒரு சக்தியாலும் நம்மிடையே பிரிவினையை உருவாக்க முடியாது.
அரசியல் கட்சிக்கு ஓட்டு போடுவதையும் தாண்டி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இதை என்றென்றும் கடைபிடிக்க வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாதி, மத பேதமற்ற இயக்கம். மக்களின் நலனையும், மக்களையும் பாதுகாக்கும் இயக் கம். உங்களுக்கு இந்த இயக்கம் பாதுகாப்பாக இருக்கும்" என்று அவர் பேசினார்.
அதன்பின்னர் சாத்தான்குளம் வேலன் புதுக்குளத்தைச் சேர்ந்த மருதையா - முத்தம்மாள் தம்பதியின் ஆண் குழந்தைக்கு 'ஜெய்சசிகரன்' என்று டி.டி.வி.தினகரன் பெயர் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து இரவு குற்றாலத்தில் நிறைவு செய்தார்.