
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிரங்கியிருக்கும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது தங்கியுள்ள தி விண்ட் பிளவர் ரிசார்ட்சில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு மற்றொரு விடுதிக்கு மாறுகின்றனர்.
புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள சின்னவீராம்பட்டினம் அருகே உள்ள தி விண்ட் பிளவர் என்ற ஆடம்பர சொகுசு ரிசார்ட்டில் கடந்த 4 நாட்களாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விடுதியில் 18 எம்எல்ஏக்களும் வாக்கிங், ஜாக்கிங், விளையாட்டு, மசாஜ், வகை, வகையான உணவுகள் என சகல வசதிகளுடனுடன் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், அந்த ரிசார்ட்டில் முன்பதிவு செய்த காலம் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைவதால் எம்.எல்ஏ.,க்கள் அனைவரும் இன்று வேறு ரிசார்ட்டிற்கு மாற்றப்பட உள்ளனர்.
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சன்வே என்ற தனியார் சொகுசு விடுதியில் தான் தங்க வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 11.30 மணியளவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் இந்த ரிசார்ட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்காக இந்த ரிசார்ட்டில் 10 சூப்பர் ரூம்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ., ஒருவர் தான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
உணவை பொறுத்தவரை பபே முறை இருப்பதாகவும், எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால் அவர்கள் விரும்பும் உணவை பிரத்யேகமாக சமைத்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.