பன்னீரை தமிழ்நாட்டை விட்டே துரத்தணும்: புதுகட்சி தினகரனின் சிங்கிள் டார்கெட்!

First Published Mar 15, 2018, 7:54 AM IST
Highlights
TTV Dinakaran meeting at madurai ops will be removed from tamilnadu


அஸ்திவாரமே தோண்டவில்லை! அதற்குள் தான் கட்டப்போகும் வீட்டின் பெயிண்ட் வாசனை அள்ளிட்டு போகுது! என்று ஓவர் சீன் போடுகிறார் டி.டி.வி. தினகரன்...என்று விமர்சனம் எழ, அதற்கு ’தொட்டதெல்லாம் சக்ஸஸ் ஆகுற மனுஷன் டி.டி.வி. அவர் நினைச்சாலே அது நடந்து முடிஞ்ச மாதிரிதான்.’ என்று எதிர்பாட்டு பாடுகிறார்கள் அவரது ஆல்டைம் ஆதரவாளர்கள். 

பரபரவென்று கிறுகிறுத்துக் கிடக்கும் தமிழக அரசியலில் எப்போதுமே அலட்டிக் கொள்ளாமல் மிஸ்டர் கூல்! ஆக காய் நகர்த்துபவர் டி.டி.வி. தினகரன். சுயேட்சையாக வந்து அ.தி.மு.க.வுக்கு சுளுக்கெடுத்துக் கொண்டிருக்கும் அவர் புதிய கட்சி வேறு துவங்குவதால் மெரண்டு கிடக்கிறது ஆளுங்கட்சி வட்டாரம். 

அரசியலில் தனக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருந்தாலும் கூட யாரையுமே குறிப்பிட்டு குறிவைத்து பழி பேசியதில்லை தினகரன். ஆனால் தான் துவங்கும் புதுக்கட்சியானது இரண்டு பேரின் கதையை கந்தலாக்க வேண்டும் என்பதில் தினகரன் குறியாக இருக்கிறார். அதில் ஒருவர் பன்னீர்செல்வம்! என்பதில் ஆச்சரியமே இல்லை. இன்னொருவர் ‘கமல்ஹாசன்’ என்பதுதான் ஷாக்கே. 

தனது புதுக்கட்சியின் செயல் வடிவமைப்பு பற்றி திட்டமிட்டு பேசிக் கொண்டிருந்த தினகரன், ‘அ.தி.மு.க.வை நடத்துற ஒட்டுமொத்த நிர்வாகிகளும் நமக்கு டார்கெட்டுதான். மக்கள் நமக்கு ஆதரவா இருக்குறது புரிஞ்சு போச்சு. ஆனாலும் நாம செய்யுற அதிரடி அரசியல்ல எடப்பாடி, பன்னீர்செல்வம் ரெண்டு பேரும் ஆட்டம் கண்டு அரசியலை விட்டே நகர்ந்துடணும். அதிலேயும் பன்னீர்செல்வம் இனி தமிழ்நாட்டை விட்டே ஓடினாலும் எனக்கு சந்தோஷம்தான். 

அவரும், அவர் மகனும் சேர்த்து வெச்சிருக்கிற சொத்துக்கு அமெரிக்காவுக்கே போயில் வொயிட் ஹவுஸ்ல ரூமெடுத்து டீ கடை போடலாம்தான். தாராளமா செஞ்சுட்டு போகட்டும். ஆனால் அவரு தமிழ்நாட்டுலேயே இருக்க கூடாது!” என்று கடுப்பானவர், அடுத்து 

”இன்னொருவர் என் மெயின் டார்கெட் கிடையாது. ஆனாலும் சொல்றேன் ஆர்.கே.நகர் தேர்தல்ல நமக்கு வெற்றி தந்த மக்களை பார்த்து ‘திருடனிடம் பிச்சை எடுப்பதற்கு சமம்’ அப்படின்னு கேவலமா பேசுன கமலும் நமக்கு முழு அரசியல் எதிரிதான். பத்து பேரை மட்டுமே கையில் வெச்சிருக்கிற, அரசியல்ல பாலர் வகுப்பு கூட தாண்டாத அவர் நமக்கு சமமில்லைதான். ஆனாலும் நம்மோட அதிரடியில அந்த மனுஷனும் ஓடிடணும். ” என்று பொரிந்து கொட்டிவிட்டாராம். 

தினகரன் இந்தளவுக்கு கடுப்பாகி இதுவரையில் பார்த்திராத அவரது நெருங்கிய நிர்வாகிகள், ‘எதுக்குண்னே அலட்டிக்கிறீங்க? நீங்க கட்சி துவக்குறதா சொன்னதுமே சப்தநாடியும் ஒடுங்கிப்போயி கிடக்குது அரசாங்கம். ஆட்டம் போட்டவங்க தானா அடங்கி, மக்கி, மண்ணாகப்போறாங்க பாருங்க’ என்று கூல் செய்தார்களாம். 

தனது புதிய கட்சி குறித்து ஆனாலும் ஓவர் நம்பிக்கையிலிருக்கும் தினகரன் என்னதான் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தபோகிறார் என்று கவனிப்போம்!

click me!