ஆளுநர் மாளிகையில் டிடிவி...! திரண்டனர் ஆதரவாளர்கள்...!

Asianet News Tamil  
Published : Sep 07, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
ஆளுநர் மாளிகையில் டிடிவி...! திரண்டனர் ஆதரவாளர்கள்...!

சுருக்கம்

TTV Dinakaran meet governor Vidhyasagarrao

தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்னும் சில நிமிடங்களில் சந்திக்க உள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று ஆளுநர் கைவிரித்து விட்டார்.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், முதலமைச்சர் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், டிடிவி தினகரன் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கப் புறப்பட்டார்.

3 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கருணாஸ், கலைச்செல்வன், ரத்னசபாபதி ஆகியோரும் உடன் சென்றனர்

டிடிவி தினகரன், ஆளுநர் வித்யாசகர் ராவ்-ன் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆளுநர் மாளிகையை நோக்கி டிடிவி தினகரன் வந்து கொண்டிருப்பதால், ஆளுநர் மாளிகையில் டிடிவியின் ஆதரவாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!