
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் சுற்றில் டி.டி.வி.தினகரன் 600 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப் பதிவு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரிக்கு பலத்த காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு தாபல் ஓட்டு திமுகவின் மருது கணேசுக்கு கிடைத்தது. இதையடுத்து முத்ல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 600 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 257 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். திமுக மனறாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளர் மருது கணேஷ் 92 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.