ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - முதல் சுற்று - டிடிவி தினகரன் முன்னிலை

 
Published : Dec 24, 2017, 08:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - முதல் சுற்று - டிடிவி தினகரன் முன்னிலை

சுருக்கம்

In the first round of the RK Nagar midfielder Independent candidate DDV Dinakaran has 412 votes.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர்  21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ராவும் பகலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இதையடுத்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சொன்னபடி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

தேர்தலை முறைப்படி நடத்த 15 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படை பாதுகாப்புக்காக வந்திருந்தது. 

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஓட்டுப்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 

இதில், முதல் சுற்றில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

இரண்டாம் இடத்தில்  அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் உள்ளார். மூன்றாம் இடத்தில் திமுக மருதுகணேஷ் உள்ளார். பாஜக  4 வ்து இடத்தில் உள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகளும் டிடிவி தினகரன் தான் வெற்றி பெறுவார் என கூறியது குறிப்பிடதக்கது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!