"அடுத்தடுத்த வழக்குகளால் தடுமாறும் டிடிவி..." - சசிகலாவை சந்திக்க பெங்களூரு செல்கிறார்

 
Published : Apr 17, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"அடுத்தடுத்த வழக்குகளால் தடுமாறும் டிடிவி..." - சசிகலாவை சந்திக்க பெங்களூரு செல்கிறார்

சுருக்கம்

ttv dinakaran going to meet sasikala in bangalore

அடுத்தடுத்த வழக்குகளால் தட்டுத்தடுமாறியுள்ள டிடிவி தினகரன் சிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு செல்ல உள்ளார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாகக் கூறி டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள போலீசார் அவரைக் கைது செய்யும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் எடுத்துள்ள இந்த திடீர் நடவடிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். டிடிவியை ஒதுக்காவிட்டால் கட்சியும் ஆட்சியும் இருக்காது என்று டெல்லியில் இருந்து தொடர்ந்து எச்சரிக்கைகள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் டிடிவி தினகரன் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதால், பிரச்சனையை சமாளிக்க டிடிவி இன்று பெங்களூரு செல்கிறார்.

பணப்பட்டுவாடா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை விசாரணைக்கு இன்று ஆஜர், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை, இரட்டை இலைக்கு லஞ்சம் அளித்ததாக தினகரன் மீதான வழக்கு என இன்று நாளில் ஏற்பட்ட திருப்பங்கள் யதார்த்தமா?

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!