"லட்சியத்துக்காக பெறப்பட்ட இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுப்பது தலைகுனிவு" - தமிழிசை வேதனை

First Published Apr 17, 2017, 10:16 AM IST
Highlights
tamilisai talks about irattai ilai issue


ஆர்கே நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு சசிகலா அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், டிடிவி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தையும், மதுசூதனனுக்கு மின் கம்பம் சின்னமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டிடிவி.தினகரன் இடை தரகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்ததாக புகார் எழுந்தது. இதையொட்டி இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தமிழகத்துக்கு தலைகுனிவு’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“லட்சயத்துக்காக தலை நிமிர்ந்து எம்ஜிஆரால் பெறப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற, லட்சங்களை லஞ்சமாக கொடுத்து இருப்பது தமிழகத்துக்கு தலை குனிவு” என பதிவு செய்துள்ளார்.

click me!