கைது ஆவாரா தினகரன்? - சென்னை விரைந்தது டெல்லி போலீஸ்

 
Published : Apr 17, 2017, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
கைது ஆவாரா தினகரன்? - சென்னை விரைந்தது டெல்லி போலீஸ்

சுருக்கம்

delhi police coming to chennai to arrest dinakaran

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால், திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

முன்னதாக அதிமுகவின் இரு அணிகளும் இடைத் தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தன. ஆனால், சசிகலா அணிக்கு தொப்பியும், ஓ.பி.எஸ். அணிக்கு மின்கம்பமும் சின்னமாக வழங்கப்பட்டது.

ஆனால், டிடிவி.தினகரன் தரப்பினர், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்ததாக தெரிகிறது. இதற்காக சுகேஷ் சந்திரா என்பவரிடம் ரூ.1.5 கோடி கொடுத்தாகவும் புகார் எழுந்தது.

இதையொட்டி சுகேஷ் சந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசில், டிடிவி.தினகரன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதே வேளையில் அவரை கைது செய்ய வேண்டும் என அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கே பணம் கொடுத்தவர். இதுதொடர்பாக ஏற்கனவே அவர் மீது புகார் உள்ளது என கூறுகின்றனர்.

இந்நிலையில், டெல்லி போலீசார், டிடிவி.தினகரனை இன்று, சென்னை விரைந்துள்ளனர். இதையொட்டி இன்று மாலை அவர் கைது செய்யப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!