"மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னை வரவேண்டும்" - டிடிவி தினகரன் அவசர அழைப்பு

 
Published : Feb 26, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னை வரவேண்டும்" - டிடிவி தினகரன் அவசர அழைப்பு

சுருக்கம்

AIADMK district secretaries and deputy general secretary of the All Tomorrow emergency orders to the head office Shashikala assets in the case after he took office when the secretary went to jail Appointed deputy general secretary of the AIADMK

அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களும் நாளை தலைமை அலுவலகம் வர துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜெ.மறைவுக்கு பிறகு போது செயலாளராக பதவியேற்ற சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.

பின்னர் அதிமுக துணை பொது செயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.அண்ணன் மகன் தீபக் தினகரன் தலைமையை ஏற்க முடியாது என்று பேட்டி அளித்துள்ளது போயஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று டி.டி.வி தினகரன் அதிமுக மாவட்ட செயலர்களுக்கு முக்கிய அர்விப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் நாளை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் தலைமையில் கூடும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு