இரட்டை இலை சின்னத்தைப் பெற 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்ததாக டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது இரட்டை இலைச் சின்னத்திற்கு சசிகலா அணியும் ஓ.பி.எஸ்.அணியும் சொந்தம் கொண்டாடியது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பையும் டெல்லிக்கு அழைத்த தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி சசிகலாவுக்கு தொப்பியையும், ஓ.பி.எஸ்.சுக்கு இரட்டை மின்விளக்கையும் சின்னமாக அளித்தது.
அதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் தேர்தல் ஆணைய விசாரணையின் போது டெல்லியில் தங்கியிருந்த டிடிவி தினகரன், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற சதீஷ் சந்திரா என்பவரிடம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த சந்திராவை 30 லட்சம் ரூபாய் பணத்துடன் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது இரட்டை இலைச் சின்னத்திற்கு சசிகலா அணியும் ஓ.பி.எஸ்.அணியும் சொந்தம் கொண்டாடியது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பையும் டெல்லிக்கு அழைத்த தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி சசிகலாவுக்கு தொப்பியையும், ஓ.பி.எஸ்.சுக்கு இரட்டை மின்விளக்கையும் சின்னமாக அளித்தது. அதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.