அமைச்சராக இருப்பதை தவிர வேறெந்த தகுதியும் ஜெயக்குமாருக்கு இல்லை... தெறிக்கவிடும் தினகரன்!

By vinoth kumarFirst Published Oct 31, 2018, 5:15 PM IST
Highlights

அமைச்சராக இருப்பதைத் தவிர ஜெயக்குமாருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை என்றும் மண்குதிரை யார் என்பதை இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் மக்கள் நிரூபிப்பார்கள் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமைச்சராக இருப்பதைத் தவிர ஜெயக்குமாருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை என்றும் மண்குதிரை யார் என்பதை இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் மக்கள் நிரூபிப்பார்கள் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் சிலைக்கு நேற்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் குறித்து பேசுகையில், தினகரனை பொருத்தவரை அவர் ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கிய 18 எம்.எல்.ஏ.க்களின் நிலையை நினைத்து நாங்கள் உண்மையில் பரிதாபப்படுகிறோம் என்று கூறியிருந்தார். 

18 எம்.எல்.ஏ.க்களும், டிடிவி தினகரன் அல்வா கொடுத்து கெடுத்துவிட்டார். தமிழக அரசியலில் எடுபடாதவர் அவர். அவரைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். 

மேலும், 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திப்போம் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார், மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய 18 எம்.எல்.ஏ.க்களின் நிலையை நினைத்து பரிதாபப்படுவதாக கூறியது குறித்த கேள்விக்கு, 20 தொகுதிகளிலும் அதிமுகவால் டெபாசிட் கூட பெற முடியாது. ஆர்.கே.நகர் தேர்தல் போல் தோல்வியடைவர். 

மண்குதிரை யார் என்பதை எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள். பட்டாசு விவகாரம் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சராக இருப்பதைத் தவிர ஜெயக்குமாருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை மண்குதிரை யார் என்பதை இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் மக்கள் நிரூபிப்பார்கள் டிடிவி தினகரன் கூறினார்.

click me!