அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய் தீபாவளி பரிசு !! முதலமைச்சர் அதிரடி உத்தரவு….

Published : Oct 31, 2018, 04:46 PM IST
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய் தீபாவளி பரிசு !!  முதலமைச்சர் அதிரடி உத்தரவு….

சுருக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச சர்க்கரை மற்றும் துணிகளுக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பரிசாக வழங்க புதுச்சேரி முதலமைச்சர் நரராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.  

புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு செட் துணி  மற்றும் சர்க்கரை அலவசமாக வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு செட் துணி, மற்றும் சர்க்கரை வழங்கப்படும்.

ஆனால் கடந்த ஆண்டு தீபாவளி சர்க்கரை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதிக்கவில்லை. இதனால் அப்போது தீபாவளி சர்க்கரை, மற்றும் இலவசங்கள் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு இவற்றை எப்படியாவது வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வந்தன.

இது தொடர்பாக  ஆலோசனை கூட்டம் அமைச்சரவை அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அப்போது இலவசங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினார்கள்.

இதையடுத்து அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.இதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேசன் கார்டு களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியையும் ரொக்க பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இரு தொடர்பாக முலமைச்சர் நாராயணசாமி இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!