ஓபிஎஸ் மகன் விருப்ப மனு வாங்கிய விவகாரம் !! மத்தவங்களுக்கு ஒரு நியாயம்… ஓபிஎஸ்க்கு ஒரு நியாயமா ? கிழித்து தொங்கவிட்ட டிடிவி !!

By Selvanayagam PFirst Published Feb 5, 2019, 8:34 PM IST
Highlights

ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது தனது மகனுக்கு தேர்தலில் நிற்க விருப்ப மனு வாங்கியிருப்பது வாரிசு அரசியல் இல்லையா ? என கேள்வி எழுப்பிய டி.டி.வி.தினகரன், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்…ஓபிஎஸ்க்கு ஒரு நியாயமா என கிழித்து தொங்கவிட்டார்.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் அதிமுக தலைமைக் கழகத்தில் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து தரலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரகுமார் தேனி எம்பி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கி உள்ளார். முதலலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் பெயரிலும் விருப்ப மனு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதே போல் தொழில்துறை அமைச்சரும் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத்  தனது மகனுக்கும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது அண்ணனுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் மீண்டும் சென்னையில் எம்பி தேர்தலில் போட்டியிடவும் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
 
இது தற்போது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தொலைக்காட்சிகளில் இது பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கி விடக்கூடாது என்று தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்.

ஆனால் தற்போது அவரது மகனுக்கு எம்.பி.தேர்தலில் நிற்க விருப்ப மனு வாங்கியுள்ளார். இது மட்டும் வாரிசு அரசியல் இல்லையா ? என குறிப்பிட்டார். மற்றவர்களுக்கு ஒரு நியாயம், ஓபிஎஸக்கு ஒரு நியாயமா எனவும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!