எடப்பாடி- ஓ.பி.எஸை பார்த்து பதுங்கி ஒதுங்கிய தம்பித்துரை..!

Published : Feb 05, 2019, 07:14 PM IST
எடப்பாடி- ஓ.பி.எஸை பார்த்து பதுங்கி ஒதுங்கிய தம்பித்துரை..!

சுருக்கம்

ஓ.பி.எஸ்- எடப்பாடி பழனிசாமியை பார்த்தும் பார்க்காது போல பதுங்கி ஒதுங்கி சென்ற மக்களவை துணை சபாநாயகரை பற்றியே அதிமுகவில் ஹைலைட்டாக பேசப்படுகிறது.  

ஓ.பி.எஸ்- எடப்பாடி பழனிசாமியை பார்த்தும் பார்க்காது போல பதுங்கி ஒதுங்கி சென்ற மக்களவை துணை சபாநாயகரை பற்றியே அதிமுகவில் ஹைலைட்டாக பேசப்படுகிறது.

 

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த கடந்த மாதம் 31ம் தேதி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் இல்லை. அன்றைய தினம் தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அழ்பழகன் மகன் திருமணத்தில் பங்கேற்றார். அதே திருமணத்தில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வர் வருவதை அறிந்ததும், அந்த இடத்தை விட்டு உடனடியாக நகர்ந்து கொண்டாராம். ஓ.பி.எஸ்- எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேலம் விமான நிலையத்தில் இருந்து வருவதாக தகவல் கிடைத்ததும், கல்யாண வீட்டில் இருந்து அதே மார்க்கத்தில் எதிரே கரூருக்கு புறப்பட்டுச் சென்றாராம்.

சேலம் மாவட்ட எல்லையில் இவர்கள் இருவரின் கார்களும் எதிரெதிரே கிராஸ் செய்துள்ளது. அப்போது மரியாதைக்கு கூட தம்பிதுரையின் கார் கார் நிற்கவில்லை என்கிறார்கள். ஏன் இப்படி இவர் நடந்து கொள்கிறார் என்று விசாரித்தால் அதற்கும் சிறை உத்தரவே காரணம் என்கிறார்கள். சசிகலாவிடம் இருந்து வரும் உத்தரவை அடுத்த ரகசியமாக அதிமுக நிர்வாகிகளை அமமுக கட்சிக்கு இழுக்கும் வேலையை மட்டும் ரொம்பவே ரகசியமாக செய்து வருவதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!