இப்போது போய் இப்படி செய்யலாமா..? மத்திய அரசுக்கு எதிராக குமுறும் டி.டி.வி.தினகரன்..!

Published : Sep 01, 2020, 12:53 PM IST
இப்போது போய் இப்படி செய்யலாமா..? மத்திய அரசுக்கு எதிராக குமுறும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 

கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை, மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும். இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவான கேடு கெட்ட கட்சி பாஜக.. வெட்கமே இல்லையா? பிரதமர் மோடியை விளாசிய உதயநிதி!
அதிகார திமிர்..! அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது...! திமுக மீது காங்கிரஸ் எம்.பி அட்டாக்..!