"அதிகாரிகளுக்குள் போட்டியால் சசிகலாவை பயன்படுத்துகிறார்கள்" - தினகரன் குற்றச்சாட்டு

Asianet News Tamil  
Published : Jul 19, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"அதிகாரிகளுக்குள் போட்டியால் சசிகலாவை பயன்படுத்துகிறார்கள்" - தினகரன் குற்றச்சாட்டு

சுருக்கம்

ttv dinakaran about sasikala video

சிறையில் அதிகாரிகளுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக சசிகலாவை பயன்படுத்தி கொள்கின்றனர் என டிடிவி.தினகரன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:-

அதிமுக பொது செயலாளர் சசிகலா சிறையில், சாதாரண உடையில் இருப்பாக டிவியில் செய்திகளும், காட்சிகளும் வந்த வண்ணம் உள்ளன. அதுபோன்ற முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. அவருக்கு சிறையில் எந்த வசதியும் செய்து தரவில்லை. அனைத்தும் சட்டப்படி நடக்கிறது.

டிவியில், சில வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அவை அனைத்து போலியானவை. உச்சநீதிமன்றம், சசிகலாவுக்கு கொடுத்தது சாதாரண தண்டனை. இதனால், அவர் சாதாரண உடையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், டிவி செய்திகளில் அவர் ஷாப்பிங் சென்று விட்டு வருவதுபோல் கூறினார்கள்.

விவேக் பரப்பன அக்ராஹார சிறைக்கு அடிக்கடி சென்று வருகிறார் என கேட்கிறார்கள். ஆமாம், அவரது தாய் இளவரசியும் அங்குதானே அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அவர் செல்கிறார். அதை யாரும் தடுக்க முடியாது.

பரப்பன சிறைச்சாலையில் சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை அனுமதி பெற்று காத்திருக்க வேண்டும். அப்போதுதான், நாம் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க முடியும். அதேபோல் அவர் பல நிமிடங்கள் காத்திருக்கிறார். அங்குள்ளவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று பார்க்கிறார்கள்.

நான் கடந்த சில நாட்களுக்கு முன் சுதாகரனை சந்தித்தேன். அப்போது எனது சித்தி சசிகலா மற்றும் இளவரசியை சந்திக்க முடியவில்லை. காரணம் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதேபோல் எனது சித்தி சசிகலாவை பார்க்க சென்றபோது, இளவரசியை பார்க்க முடியவில்லை. நாம் யாரை சந்திக்க செல்கிறோமோ, அவர்களை மட்டுமே சந்திக்க முடியும்.

பரப்பரன அக்ரஹார சிறையில் அதிகாரிகளுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக சசிகலாவை பயன்படுத்தி கொள்கின்றனர்.  இந்த விவகாரத்தை எங்களது எதிரிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஊடகங்களுக்கு செய்தியாக கொடுத்து வருகிறார்கள். இதை எங்கள் எதிரிகள் அரசியலாக்கி பார்க்கிறார்கள்.

சிறைத்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்க வேண்டும். அதுபோல் ஆதாராம், இல்லாமல் பேசி தங்களை பிரபலப்படுத்தி கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!