எம்எல்ஏக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!!

First Published Jul 19, 2017, 1:11 PM IST
Highlights
salary increment for mla


தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது ரூ.55 ஆயிரம் பெற்று வந்தனர். 

புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியமாக சுமார் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு ஊதிய உயர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது 55 ஆயிரம் ரூபாயை மாத ஊதியமாக பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஒரு லட்சத்து ஐந்து லட்சமாக உயர்த்தி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது 2.50 கோடி ரூபாயக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை அடுத்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

click me!