மெகா கூட்டணி டெபாசிட் இழப்பு! சுக்குநூறான இடைத்தேர்தல் மாயை... 19 ஓவரிலும் விடாமல் சிக்ஸர் அடித்த தினகரன்

 
Published : Dec 25, 2017, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
மெகா கூட்டணி டெபாசிட் இழப்பு! சுக்குநூறான இடைத்தேர்தல் மாயை... 19  ஓவரிலும் விடாமல் சிக்ஸர் அடித்த தினகரன்

சுருக்கம்

TTV Dinakakaran magic in RK Nagar By election

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெறுவார் என்று கடைசி நேரத்தில் கணிக்கப்பட்டதுதான். ஆனால் இந்த அளவுக்கு இமாலய வெற்றி பெறுவோம் என்று தினகரன் சொல்லிவந்தார் இதை யார் நம்பினார்களோ இல்லையோ அவர் பெரிய வெற்றி பெறுவதாக நம்பினார். எப்போதுமே இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெல்லும் வென்ற ஒரு மாயையை உடைத்தெறிந்துள்ளார். 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் தினகரன் . 2016-ம் ஆண்டு பொது தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன்  57,673 வாக்குகள் பெற்று 2வது இடத்தை  பிடித்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 39545 வாக்குகள்.

இந்த இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் 40707. அதுவும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் பெற்ற வாக்குகள் 89013, இரண்டாவது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48306 மற்றும் டெபாசிட் இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகளை பெற்றுள்ளார்.

மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தபால் வாக்கு எண்ணிக்கையை தவிர்த்து அனைத்து சுற்றுகளிலும் குக்கர் சத்தமே பலமாக ஒலித்தது அதாவது முன்னிலை வகித்தது. இப்படி பரபரப்பாக விருறுப்பாக நடந்து கொண்டிருந்த வாக்குஎண்ணிக்கையில் நடந்த மாற்றுரு சோக சம்பவம் யாரும் எதிர்பாராதது, தமிழகத்தில் தாமரை மலர்ந்த தீரும் என்ற ஒற்றை கோஷத்தை முன்னிலை படுத்தும் வேலையில் நோட்டாவைவிட குறைந்த வாக்குகளே பெற்றது பா.ஜ.க. நோட்டா பெற்ற வாக்குகள் 2373. பா.ஜ.க பெற்ற வாக்குகள் 1417.

இதனையடுத்து தினகரனின் பிரமாண்ட வெற்றி  திமுகவை திமுகவை மட்டுமல்ல 57 வேட்பாளர்களை தூக்கி அடித்துள்ளது. அதாவது  இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் (24,651 வாக்கு) உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ஆளும்கட்சி மற்றும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி என அனைத்தையும் மீறி 2006-ம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் ராமச்சந்திரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். அதையே பின்னுக்கு தள்ளியுள்ளார் தினகரன் அதுவும் இடைத் தேர்தலில்.

ஆளும் கட்சியான அதிமுக எதிர்க்கட்சி திமுக தேசிய அளவிலான ஆளும் கட்சி பாஜக, நாம் தமிழர் ஆகிய நான்கு கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுக்கள் 78,233 வாக்குகளை பெற்றது. ஆனால் சுயேட்சை வேட்பாளர் தினகரன் மட்டுமே பெற்ற ஓட்டுக்கள் 89,013 வாக்குகள் பெற்று எட்டமுடியாத உயரத்திலுள்ளார். இது நான்கு கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்களை விட 10,780 கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு கட்சிகளின் மொத்த ஓட்டுக்களே தினகரன் பெற்ற ஓட்டுக்களை நெருங்க முடியவில்லை.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!