
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போய்ஸ்தோட்ட வேதா இல்லத்துக்குள் அவருக்கு திதி கொடுக்க முயன்ற டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதற்காக தினகரன் ஆதரவாயர்கள் திடீரென 200 க்கும் மேற்பட்டோர் குவித்தால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
ஜெயலலிதாவின் போய்ஸ் தோட்ட இல்லம் அவரது மறைவுக்குப் பிறகு அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் சசிகலாவின் 5 அறைகள், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறை என சல்லடை போட்டு சலித்தனர்,
இதில் பென் டிரைவ், லேப்டாப், ஹார்டுடிஸ்க் என பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து வேதா இல்லத்தில் உள்ள 6 அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திடீரென போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்படடது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனை முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததையடுத்து போலீஸ் குவிக்கப்பட்டது.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், கலைராஜன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் போய்ஸ காட்னை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு மாதாமாதம் செய்யக்கூடிய சடங்குகள் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் வருமான வரி சோனை நடைபெற்று அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாரையும் உள்ளே விடமுடியாது என போலீசார் தெரிவித்தனர்.
திதி நடத்தக் கூடிய புரோகிதர்களை மட்டுவது உள்ளே அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கேட்டதற்கு அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய வெற்றிவேல், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் திதியை நடத்தத்தான் நாங்கள் அனுமதி கேட்டோம், ஆனால் அதற்கு கூட இந்த மக்கள் விரோத அரசு அனுமதி அளிக்க மறுத்தவிட்டது என குறிப்பிட்டார். புரோகிதர்களை கூட அவர்கள் விட மறுத்தாக் கூறிய வெற்றிவேல் இவர்களை அம்மாவின் ஆன்டா மன்னிக்காத என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.