
மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் மறைவிற்கு பிறகு ஓராண்டு நிறைவுற்ற சமயத்தில், அவருக்கு திதி கொடுப்பதற்காக தினகரன் ஆதரவாளர்கள் வேதா இல்லத்திற்கு சென்றனர்
போயஸ் கர்டன் சென்ற தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் உள்ளிட்ட சிலரை உள்ளே செல்ல காவலர்கள் அனுமதி தராமல் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
மாதம்தோறும் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வை செய்வதற்கு திடீரென ஏன் தடுக்கிறார்கள் என வெற்றிவேல்கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும்,தங்களை அனுமதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை திதி கொடுக்கும் தருவாயில் அதற்கான பூஜைகள் செய்வதற்கு வருகை புரிந்திருக்கும் புரோகிதர்களையாவது உள்ளே விட வேண்டும் என கேட்டுள்ளார் வெற்றிவேல்.
போயஸ் கார்டன் உள்ளே செல்வதற்கு ஏன் தடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த காவல்துறை,"அரசு தரப்பிலிருந்து உத்தரவு வரவில்லை என்றும், வருமான வரி சோதனையை நடந்துள்ளதையும் காரணமாக காட்டி உள்ளனர்" .
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து காவலர்களுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது