திமுக அரசை திடீரென பாராட்டிய டி.டி.வி தினகரன்.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 19, 2022, 1:03 PM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார். 

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை வரவேற்கத்தக்கது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

சுவாமிமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;-  எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார். 

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை வரவேற்கத்தக்கது. இவ்வாறு கூறுவதால் நான் திமுகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக மிகக் குறைவு இதனை 3000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

click me!