திமுக என்றாலே ஊழல் தான்... அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரம் கடும் விமர்சனம்!!

Published : Dec 04, 2022, 09:28 PM IST
திமுக என்றாலே ஊழல் தான்... அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரம் கடும் விமர்சனம்!!

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர்,  பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது, போடாத சாலைகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது.

இதையும் படிங்க: ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்..! அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்- அதிமுக முன்னாள் எம்பி பரபரப்பு தகவல்

அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பது தான் ஒரு கட்சியின், ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறது. திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

இதையும் படிங்க: ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு…டெல்லி செல்கிறார் ஸ்டாலின்… ஈபிஎஸ் செல்வாரா?

2023 இல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் ஈபிஎஸ்யிடம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் தான் காரணம். ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சனையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது, ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!