ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்..! அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்- அதிமுக முன்னாள் எம்பி பரபரப்பு தகவல்

Published : Dec 04, 2022, 12:30 PM ISTUpdated : Dec 04, 2022, 12:32 PM IST
ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்..! அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்- அதிமுக முன்னாள் எம்பி பரபரப்பு தகவல்

சுருக்கம்

தமிழக அரசும் மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா இறந்தது எப்போது.?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. சுமார் 5ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு 4 ஆம் தேதியே இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

கோவை செல்வராஜை நீக்கிய ஓபிஎஸ்..! புதிய மாவட்ட செயலாளரை நியமித்து அதிரடி

4 ஆம் தேதி தான் நினைவு நாள்

இந்தநிலையில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரோடு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிச்சாமி,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று (டிசம்பர் 4) தான் எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதாக கூறினார். ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ பன்னீர்செல்வம். எனவே இவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

திமுகவின் சாதனைகளை பொறுக்க முடியாததால் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- பாஜகவை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்

ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரையில் அவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை அதில் குறிப்பிட்டுள்ள தேதியை நாங்கள் ஏற்கவில்லை என்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே அடுத்த ஆண்டிலிருந்தாவது உண்மையான நினைவு நாளான டிசம்பர் நான்காம் தேதியை ஜெயலலிதாவின் நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழக அரசும், மத்திய அரசும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்..! கண்டு கொள்ளாத அரசு- ராமதாஸ் ஆவேசம்

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!