ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு…டெல்லி செல்கிறார் ஸ்டாலின்… ஈபிஎஸ் செல்வாரா?

By Narendran SFirst Published Dec 4, 2022, 5:43 PM IST
Highlights

ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார். 

ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார். இந்தோனேசியா பாலி தீவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில், ஜி20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த 1 ஆம் தேதி ஏற்றது. இந்த நிலையில், ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்..! கண்டு கொள்ளாத அரசு- ராமதாஸ் ஆவேசம்

இதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஜி20 கூட்டங்கள் நடத்தப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜி20 கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில், பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும்மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா இறந்தது 4ஆம் தேதி தான்..! அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்- அதிமுக முன்னாள் எம்பி பரபரப்பு தகவல்

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!