TTV Dhinakaran: தீய சக்தி திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் சொல்லி இருப்பார்களோ? பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.!

Published : Dec 27, 2021, 10:39 AM IST
TTV Dhinakaran: தீய சக்தி திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் சொல்லி இருப்பார்களோ? பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.!

சுருக்கம்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என டிடிவி.தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் ஆகிய இருவரும் தனித்தனியாக காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். ஆனால், ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அனுமதி அளிக்க காவல்துறை மறுத்துவிட்டது. இதனையடுத்து, அமமுக தலைமை அலுவலத்தில் எம்ஜிஆர் புகைப்படத்தை வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளித்தது. இதில், பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஒமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தால் ஒமிக்ரான் பரவாத என கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?

 

ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான்  பரவும் என்று  தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது  சொல்லி இருப்பார்களோ இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும்  கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி