ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்க்கு எதிரானது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மரபிற்கு எதிரானது
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்த கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் காலம் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்க்கு எதிரானது என கூறினார்.
ஆணவத்தில் பேசும் அதிமுகவினர்
எந்த அரசு சட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதே ஆளுநர் பதவிக்கு அழகு என தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைப்பெறாமல் விமர்சனங்கள் இல்லாமல் ஆளுநர் பார்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசியல் இருப்பவர்களின் தலையெழுத்து மக்கள் கையில் உள்ளது ஆணவத்தின் வெளிபாடாக அதிமுகவினர் பேசி வருகின்றனர், அவர்களுக்கு மக்கள் நல்ல முடிவை தருவார்கள் என கூறினார். தேர்தல் நோக்கிய செயல்பாடுகளிலும்,கட்சி வளர்ச்சி செயல்பாடுகளிலும் அமமுக முன்னோக்கி செயல்படுகிறது என தெரிவித்தார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் தர வேண்டும் என்று கூறிய அவர் டிசம்பர் 31க்குள் 100% முடியவில்லை என்றால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்