டி.டி.வி.தினகரனின் நயவஞ்சக அரசியல்... கோயில்பட்டியில் போட்டியிடுவதில் உள்குத்து..?

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2021, 5:55 PM IST
Highlights

ஏற்கெனவே சாதிக்கட்சி நடத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து அவரது அமமுகவில் இருந்து பலர் வெளியேறி விட்டனர். 

தான் சார்ந்த சமூகத்தையே நம்பாமல், தனது சுயநல அரசியலுக்காக அந்த சமூக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன் என்கிற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் கள்ளனுக்கு, கோவில்பட்டி மறவர் ஓட்டு எதற்கு? என்கிற அதிரடி கேள்வியோடு ஆரம்பித்த முக்குலத்தோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ‘’1995ல் சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை திறந்து வைத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியபோது, ‘’கள்ளர், மறவர், அகமுடையோர்களை இணைத்து தேவரினம்’’ என அறிவித்தார். அந்த அரசாணையை நடைமுறை படுத்தவிடாமல் செய்தது தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டு தாம்பரத்தில் வாழ்ந்த கள்ளர் இனத்தை சார்ந்த ஒருவரே காரணம். அவரை தூண்டிவிட்டது சசிகலா குடும்பம் தான்.

இன்று, அதே சசிகலாவின் குடும்பத்தை சார்ந்த டி.டி.வி.தினகரன் மறவர்கள் வாழும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவது முக்குலத்தோரை ஏமாற்றும் செயல். இவர் ஏன் தஞ்சாவூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர் ஏன் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தொகுதில் போட்டியிட விரும்பவில்லை? கோயில்பட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்? அதிமுகவை மீட்போம் எனக்கூறி அரசியல் காரணத்திற்காக முக்குலத்தோரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன் என்பதே உண்மை. 

தென்மாவட்டத்தை சேர்ந்த குறிப்பாக, மறவர் இனத்தின் சமூகப் பற்றுதலை இறுகப்பற்றிக்கொண்டு, தனது சுயநலனுக்காக பயன்படுத்தி சமூக ரீதியாக வெறுப்பு அரசியலை நடத்திவருகிறார்’’ என அதிரடி குற்றச்சாட்டை முன் வைத்தார். 

முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான மறவர் சமூக அமைப்பை சேர்ந்த மற்றொருவர், இது குறித்து பேசுகையில், ‘’கருணாஸ் என்கிற முக்குலத்தை சாராத வேற்று மதத்தைச் சேர்ந்த மனிதருக்கு, தேவர் இனத்தவர்களுக்கான கோட்டாவில் சீட் கொடுத்து முக்குலத்தோரை ஏமாற்றும் செயலை செய்தது மன்னார்குடி கும்பல். இன்று திமுகவோடு மறைமுகக் கூட்டணி அமைத்து தேவரின அரசியலை அழிக்கும் வேலையை செய்து வருகிறது.

தைரியமான நபராக டி.டி.வி.தினகரன் இருந்தால், கள்ளர்கள் அதிகம் வாழும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் போட்டி போட்டியிருக்க வேண்டும். அல்லது அவரது, சொந்த ஊரான டெல்டா பகுதியிலே போட்டியிட்டு இருக்கலாமே? அதை தவிர்த்து, மறவர்கள் அடர்த்தியாக வாழும் கோவில்பட்டியில் வந்து போட்டியிடுவது என்பதுதான் பிறந்த உட்பிரிவை நம்பாமல் எங்கள் முக்குலத்தோரில் மறவர் இனத்தை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற கோவில்பட்டியில் போட்டியிடுகிறார் தினகரன்’’ என்கிறார் மறவர் அரசியல் களம் எனும் அமைப்பை சார்ந்த அவர்.

ஏற்கெனவே சாதிக்கட்சி நடத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து அவரது அமமுகவில் இருந்து பலர் வெளியேறி விட்டனர். இப்போது தனது சமூகத்திற்குள்ளும் அரசியல் மோதலை ஏற்படுத்தி தனது சாதியினரை பகடைக்காயாக நகர்த்துகிறார் டி.டி.வி.தினகரன் என்கிற பேரவலத்திற்கு ஆளாகி வருகிறார் என்கிறார்கள் அவரது கட்சிக்காரர்கள். 

click me!