அமமுகவுக்குள் அடுத்த சரவெடி ஆரம்பம்... உள்ளூரக் கலவரத்தில் டி.டி.வி.தினகரன்..!

Published : Aug 15, 2019, 06:32 PM IST
அமமுகவுக்குள் அடுத்த சரவெடி ஆரம்பம்...  உள்ளூரக் கலவரத்தில் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

அமமுகவில்  நடந்து வரும் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் ஈகோ யுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் கலக்கத்தில் உள்ளார் டி.டி.வி.தினகரன்.    

அமமுகவில்  நடந்து வரும் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் ஈகோ யுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் கலக்கத்தில் உள்ளார் டி.டி.வி.தினகரன்.  

இந்த பயிற்சி முகாமில் பேச்சாளர்கள் மட்டுமில்லாது நன்றாக  பேசுபவர்களும் பங்கேற்கலாம். உங்கள் பேச்சு ரசிக்க முடியும் அளவுக்கு இருந்தால் நீங்கள் அமமுகவின் பேச்சாளராக தமிழகம் முழுவதும் வலம் வரலாம் என அறிவித்து இருக்கிறார்கள். 

இதனால் சீனியர் பேச்சாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ‘’ சின்ன பசங்க எல்லாம் எங்களுக்கு நிகரா உட்கார வைத்து  பேசச் சொல்வதா? என்று ஒரு பக்கமும், ‘’எங்களுக்கே பணம் சரியாக தர மாட்டேன் என்கிறார்கள்.. இந்த நிலையில் கத்துகுட்டிகளை எல்லாம் பயன்படுத்துவதா? என்று தற்போதுள்ள பேச்சாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளார்களாம். இன்னொரு  தரப்போ, அமமுகவில்  பேச்சாளர்களுக்கு பற்றாக்குறை. தொண்டர்களுக்கு பற்றாக்குறை. அதனால் தான் இப்படி செய்கிறார்கள் என நாலாவிதமாகவும் பேசி வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு