’அமாவாசைக்கே அல்வா...’ டி.டி.வி.தினகரனின் அமமுக.,வினருக்கு ஆசைகாட்டி ஆடிப்போக வைத்த கில்லாடிப்பெண்..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2020, 11:16 AM IST
Highlights

அமமுக கட்சியை சேர்ந்த ஒருபெண்மணி, அக்கட்சியை சேர்ந்தவர்களையே லோன் வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி மாட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

அமமுக கட்சியை சேர்ந்த ஒருபெண்மணி, அக்கட்சியை சேர்ந்தவர்களையே லோன் வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி மாட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமணி. டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியில் பொறுப்பாளராக இருக்கிறார்.  அந்தப்பதவியை மூலதனமாக வைத்துக் கொண்டு கன்னியாகுமரி குமரி மாவட்டத்திலுள்ள ஏழை குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களது ஏழ்மையை முதலீடாக்கி மோசடி செய்து வந்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் தான் சார்ந்திருக்கும் கட்சியின் அறிவுறுத்தலின் படி கலெக்டர் அலுவலகம் வழியாக லோன் வழங்குவதாகவும் பலரும் புகார் கூறியுள்ளார்கள்

.

இதைத் தொடர்ந்து அந்த லோன் உங்களுக்கு கிடைத்தால் உங்கள் ஏழ்மை நிலை மாறும் என ஆசைவார்த்தைகள் கூறி பல லட்சம் ருபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துள்ளார். லோன் கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் முதலில் தலா 3000 ஆயிரம் ருபாய் செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு பணம் செலுத்திய 3வது நாள் உங்களுக்கு 1 லட்சம் லோன் கிடைக்கும் என்று கூறுவாராம். 

அதன் பிறகு பணம் கொடுத்த நபர்களிடம் சென்று உங்களுக்கு தர கொண்டு வரப்பட்ட பணம் விஜிலென்ஸ் போலீசார் மற்றும் புதுக்கடை காவல்நிலைய ஆய்வாளர், உள்ளிட்ட காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக சிறிது பணம் கொடுத்தால் பிடித்து வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். அது கிடைத்த உடன் உங்களுக்கு தர வேண்டிய பணத்துடன் இந்த பணத்தையும் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறி பல லட்சம் ருபாயை வாங்கி சென்று விடுவதாக கூறுகிறார்கள். 

பலரின் பணம் அங்கு பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த பணத்தை மீட்க முடியாவிட்டால் நான் இங்கேயே இறந்து விடுவேன் என கத்தியை தன்னுடைய கழுத்தில் வைத்து மிரட்டுவதாகக் கூறுகிறார்கள். அதற்கு பயந்து ஒருசிலர் நகைகளை விற்றும், பிறரிடமிருந்து கடன் வாங்கியும் பணத்தை கொடுத்துள்ளனர். பிறகு பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டால் தரலாம் தரலாம் என கூறியுள்ளார்.

ஒருசிலர் பணத்தை கொடுக்கா விட்டால் காவல் நிலையங்களில் புகார் கொடுப்போம் என்று கூறினால் அவர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். அவரின் மிரட்டலுக்கு ஆளாகாதவர்களுக்கு போலியான செக்குகளை கொடுத்து ஏமாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் ஏமாற்றியதில் அவர் சார்ந்திருக்கும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தினரே அதிகம். முதலில் ஒரு பெண்மணியிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அவர் மூலமாக மற்ற பெண்களை ஏமாற்றுவது இவரது வாடிக்கை.

 

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இதே பாணியில் பல்வேறு குடும்பங்களை ஏமாற்றி பணமோசடி செய்த விவரம் பாதிக்கபட்டவர்களுக்கு தெரியவர, பண மோசடியில் ஈடுபட்டு வரும் அமமுக பெண் நிர்வாகியை கைது செய்யவும், பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தரவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

click me!