அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு என்ன ஆச்சு.. முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பணம் திடீர் ரத்து..!

Published : Oct 28, 2020, 10:51 AM IST
அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு என்ன ஆச்சு.. முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பணம் திடீர் ரத்து..!

சுருக்கம்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி பயணம் 3வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி பயணம் 3வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த மாதமே முதல்வர் ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக முதல்வர் வேட்பாளர் பிரச்சனை பெரிய அளவில் நடந்துகொண்டிருந்ததால் இந்த மாவட்டங்களில் கடந்த மாதம் நடைபெற இருந்த ஆய்வுப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.  

இதையடுத்து, அக்டோபர் முதல் வாரம் இந்த மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள இருந்தார். ஆனால், முதல்வரின் தாயார் காலமானதால் ஆய்வுப்பணி 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது.   இதனால், 3வது முறையாக நாளை தூத்துக்குடி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால், முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பயணம் 3வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..