வெளிநாட்டு சதியால் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டமா.? ஆளுநர் ரவி ஆதாரங்கள் வெளியிடனும்.!- டிடிவி தினகரன் ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Apr 7, 2023, 10:13 AM IST

ஆளுநரின் பேச்சு அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என சட்டவல்லுநர்கள் கருதுவதை மனதில்கொண்டு, இனிவரும் காலங்களில் ஆளுநர் இதுமாதிரியான வார்த்தைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 


ஸ்டெர்லைட் போராட்டம்-வெளிநாட்டு சதி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்தநிலையில் தான் நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  மசோதாவை நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என தெரிவித்திருந்தார். ஆளுநரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆளுநர் என்பவர் ஆளநராக செயல்பட வேண்டும் ஓர் சர்வாதிகாரி போல் செயலாற்ற கூடாது..! எச்சரிக்கும் காங்கிரஸ்

ஆதாரங்களை வெளியடனும்

இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சதியால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டது என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த மக்களின் உறவினர்களிடம் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் கூற்றில் உண்மையிருக்கும்பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதை விடுத்து ஸ்டெர்லைட் ஆலையால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் மாளிகை கிடப்பில் வைத்திருந்தாலே அது ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று பொருள் என ஆளுநர் கூறியிருப்பதும் ஏற்புடையதல்ல. 

புதிய காரணங்களை தேட வேண்டாம்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் மசோதா இரண்டாம் முறையாக பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பிறகும் ஆளுநர் இவ்வாறு பேசியிருப்பது ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த பேச்சு அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என சட்டவல்லுநர்கள் கருதுவதை மனதில்கொண்டு, இனிவரும் காலங்களில் ஆளுநர் இதுமாதிரியான வார்த்தைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்து மசோதாக்களை கிடப்பில் போடாமல், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை மக்களின் நலன் கருதி உரிய திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தி அதற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

தமிழகம் வரும் மோடி..! உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை- பிரதமரின் பயண திட்டம் என்ன தெரியுமா.?

click me!