தமிழகம் வரும் மோடி..! உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை- பிரதமரின் பயண திட்டம் என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Apr 7, 2023, 9:36 AM IST

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். இதனையடுத்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மோடி நாளை இரவு கர்நாடாக மாநிலம் சென்ற பின்னர் மீண்டும் 9 ஆம் தேதி உதகைக்கு வரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி 5  அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


சென்னைக்கு வரும் பிரதமர் மோடி

தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடி நாளை மதியம் 2:45 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில்  புதிய முனையத்தை பிரதமர் மூன்று மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஐ என் எஸ் அடையார் விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று சேர்கிறார். அங்கிருந்து கா் மூலமாக சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணி அளவில் செல்லும் மோடி, சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மோடியின் தரிசனத்திற்காக காத்திருக்கும் தொண்டர்கள்.! திருவிழாவாக கொண்டாட காத்திருக்கும் மக்கள்- அண்ணாமலை

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்லும் மோடி

இதனை தொடர்ந்து  தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை, இதேபோல, ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதனையடுத்து கார் மூலமாக மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அந்த மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.  

இதையும் படிங்க;-  இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி... டிவிட்டரில் ட்ரெண்டாகும் #Vanakkam_Modi!!

தெப்பகாட்டிற்கு செல்லும் மோடி

அங்கிருந்து கார் மூலமாக அருகில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்திற்கு செல்லும் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு. திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறார். இதனையடுத்து தனது சென்னை பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி நாளை இரவு 7:45 மணி அளவில் சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர் சென்றடைகிறார். அடுத்த நாள் 9ஆம் தேதி  காலை 9. 35 மணி அளவில் மைசூரில் இருந்து நீலகிரி மாவட்டம் தெப்பகாட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தடைகிறார். அங்கு ஆஸ்கர் விருது என்ற ஆவணப்படமான எலிபன்ட் விஸ்பர் படத்தில் இடம்பெற்ற பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாடும் பிரதமர் மோடி யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார்.

இதையும் படிங்க;-   பிரமரின் வருகையை முன்னிட்டு மசனகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்

இதனையடுத்து புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மைசூர் செல்லவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படியுங்கள்

ஆளுநர் என்பவர் ஆளநராக செயல்பட வேண்டும் ஓர் சர்வாதிகாரி போல் செயலாற்ற கூடாது..! எச்சரிக்கும் காங்கிரஸ்

click me!