டோக்கன் செல்வருக்கு அமாவாசை சோறு எல்லா நாளும் கிடைக்காது! டி.டி.வியை டெல்லியில் தெறிக்கவிட்ட ஜெயக்குமார்

First Published Aug 5, 2018, 11:08 AM IST
Highlights

ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி வெற்றி பெற்றதை அமாவாசை சோறு என்னாளும் கிடைக்காது என்கிற பழமொழியை கூறி ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி வெற்றி பெற்றதை அமாவாசை சோறு என்னாளும் கிடைக்காது என்கிற பழமொழியை கூறி ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த டி.டி.வி தினகரன், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறியிருந்தார். மேலும் அ.ம.மு.க வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவதுஉறுதி என்றும் தினகரன் தெரிவித்திருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெற்றதை போல திருப்பரங்குன்றத்தில் தனது வேட்பாளர் வெற்றி உறுதி என்றும் தினகரன் கூறியிருந்தார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது என்பது அமாவாசை அன்று ஒருவருக்கு கிடைக்கும் சோறு போன்றது. ஆனால் அந்த நபரால் தினந்தோறும் அந்த சோறை சாப்பிட முடியாது. ஏனென்றால் அமாவாசை சோறு தினமும் யாருக்கும் கிடைக்காது என்பது தான் பழமொழி என்று கூறினார்.  திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதி என்று ஜெயக்குமார் கூறினார்.

ஆர்.கே.நகர் பார்முலாவில் தினகரனால் திருப்பரங்குன்றத்தில் வெல்ல முடியாது. ஏனென்றால் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தேர்தலுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாய் தருவதாக தினகரன் கூறியதை நம்பி மக்கள் ஆர்.கே.நகரில் வாக்களித்துவிட்டனர். தினகரன் திருப்பரங்குன்றத்திற்கு சென்று டோக்கன் கொடுத்தால் மக்கள் நம்பமாட்டார்கள்.  மேலும் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் டோக்கன் செல்வர் என்றே அழைக்கிறார்கள். வாரம் ஒரு முறை  ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருவதாக சொன்ன வாக்குறுதியை கூட தினகரனால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே தினகரனை நிச்சயமாக திருப்பரங்குன்றம் மக்கள் நம்பமாட்டார்கள். அங்கு வெற்றி பெறப்போவது அ.தி.மு.க வேட்பாளர் தான். இவ்வாறு ஜெயக்குமார் பேசியுள்ளார்.

 

click me!