ட்ரம்பே மீண்டும் அதிபராக வெற்றி பெறுவார்..!! உலகத்தை அதிர்ச்சியில் உறையவைத்த சீனாக்காரர்கள்.!!

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2020, 1:53 PM IST
Highlights

ஆனால் ஜோ பிடன் உருவம் பொறிக்கப்பட்ட  தொப்பிகள், முகக் கவசங்கள், கையுறைகளை வாங்க ஆள் இல்லை எனவும், அதற்கான ஆர்டர்களும் வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள்  கூறிவரும் நிலையில், இல்லை, ட்ரம்ப்தான் வெற்றி பெறுவார் என சீன மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது ட்ரம்ப்பின் புகைப்படங்களை கொண்ட தொப்பிகள், முகமூடிகள், அதிக அளவில் விற்பனையாவதாகவும், அது அனைத்தும் MADE IN CHINA எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிராம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். கொரோனா வைரஸ் இனவெறி போன்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ஜோ பிடன் ட்ரம்ப்புக்கு எதிராக பிரச்சாராம் செய்து வருகிறார். கொரோனா  நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்றாலும் அமெரிக்கர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் சர்வதேச அளவில் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் வரை பணம் செலவழிக்கபட்டுள்ளதாகவும் அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இந்நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் மேலோங்கியுள்ளது. ஆரம்பம் முதலில் இருந்தே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனே  தேர்தலில் வெற்றி பெறுவார் என பல கருத்துக் கணிப்பிகள் ஆருடம் கூறிவருகின்றன. ஆனால் இதை மறுக்கும் குடியரசு கட்சி, கடந்த தேர்தலிலும் கூட ட்ரம்புக்கு எதிராகவே பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனாலும் இறுதி நேரத்தில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றார் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய  எதிரி என்று ட்ரம்பால் வர்ணிக்கப்பட்ட சீனா இந்த தேர்தலில் மீண்டும் ட்ரம்ப்பே வெற்றி பெறுவார் என கூறியுள்ளது.  

அதாவது சீனாவில் விளம்பரப் பொருட்களுக்கான உலகின் மிகப்பெரிய மொத்த சந்தையான யுவு நகரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள், இந்த முறையும் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று நம்புகிறார்கள். காரணம், டிரம்ப்பின் பிரச்சாரத்திற்காக விநியோகிக்கப்படும் தொப்பிகள், பதாகைகள், குவளைகள், முகமூடிகள் போன்ற விளம்பரப் பொருட்கள் தங்கள் தொழிற்சாலைகளிலிருந்தே வழங்கப்படுகின்றன என்றும், ட்ரம்பின் புகைப்படத் தொப்பிகளுடன் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட டைனோசர்கள் மற்றும் 'கிஸ் மை பேஸ்' ஜம்பிள் அமெரிக்காவிலும் சீனாவிலும் நன்றாக விற்பனையாகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், சீனாவில் உள்ள யிடுவின் கடைக்காரர்கள் பிடனின் புகைப்படத்தின் தொப்பிகள் போன்றவற்றை விற்பனை என்பது பெயரளவுக்கு கூட இல்லை என்றும் கூறுகின்றனர். அதாவது தேர்தல் நெருங்க நெருங்க ட்ரம்பின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட தொப்பிகள், முகக் கவசங்கள், கையுறைகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும், அது சீனாவிலும், அமெரிக்காவிலும் அதிக அளவில் விரும்பி வாங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். 

ஆனால் ஜோ பிடன் உருவம் பொறிக்கப்பட்ட  தொப்பிகள், முகக் கவசங்கள், கையுறைகளை வாங்க ஆள் இல்லை எனவும், அதற்கான ஆர்டர்களும் வரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா விவகாரத்தில் சீனாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்த போதிலும், அந்நாட்டுடனான வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படும் என அவர் எச்சரித்து வந்த நிலையிலும் அமெரிக்க தேர்தலுக்கான விளம்பர பதாகைகள், பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அதிபராக மீண்டும் ட்ரம்பே வெற்றி பெறுவார் என சீனர்கள் கூறியுள்ள கருத்து உலக நாடுகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.  
 

click me!