பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை.. அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்..!

By vinoth kumarFirst Published Nov 2, 2020, 1:32 PM IST
Highlights

தீபாவளிக் கொண்டாட்டம் இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தீபாவளிக் கொண்டாட்டம் இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி கொண்டாட்டம் இன்னும் 12 நாட்களே உள்ளது. ஆனால், இந்த ஆண்டு இப்பண்டிகைக்கான ஆரவாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைவாகவே காணப்படுகிறது. பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் கலைக்கட்டாமல் உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும்,  தடை விதிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: பட்டாசுகளில் இருந்து வெளியேறும் விஷப் புகை காரணமாக கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகள், பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதைத் தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்தகுதிச் சான்றிதழ் இல்லாமல் வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

click me!