அநீதிகளுக்கு எதிராக வாழ்வின் இறுதிக் காலம் வரை நின்று போராடியவர் ட்ராபிக் ராமசாமி.. சீமான் கண்ணீர்.

By Ezhilarasan BabuFirst Published May 5, 2021, 10:25 AM IST
Highlights

அவரது மறைவு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அவருக்கு இரஅவரது மறைவு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது, அநீதிகளுக்கு எதிராக வாழ்வின் இறுதிக் காலம் வரை நின்று போராடியவர் ட்ராபிக் ராமசாமி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் டிராபிக்  ராமசாமி.  எங்கு  சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடந்தாலும் அதைத் துணிவுடன் தட்டிக்கேட்கும் நேர்மையாளராக திகழ்ந்தார். 87 வயதான டிராபிக் ராமசாமி வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு 7:4 5மணிக்கு காலமானார். 

அவரது மறைவு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கு எதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு எதிராகவும், வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாக போராடிய சமூக செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் எனும் செய்தி அறிந்து அதிர்ச்சியும் பெரும் துயரமும் அடைந்தேன்.

சமூகத்தின் மீதான தனி மனிதனின் பொறுப்புணர்வு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கான நிலைத்த அளவுகோலாகவே அய்யா அவர்களின் செயல்பாடுகள் நிகழ்ந்து அவரது புகழை என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம். அவர் விட்டுச்சென்ற சமரசமற்ற சமூக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதே அய்யாவுக்கு செய்யும் உண்மையான இறுதி வணக்கமாக இருக்கும், ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, அவர்கள் துயரத்தில் பங்கு எடுக்கிறேன், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!