இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. ஆளுநரின் சர்ச்சை பேச்சு

 
Published : Mar 06, 2018, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. ஆளுநரின் சர்ச்சை பேச்சு

சுருக்கம்

tripura governor controversial speech

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் அங்கு இன்னும் பாஜக ஆட்சியே அமைக்காத நிலையில், தெற்கு திரிபுராவின் பிலோனியா பகுதியில் இருந்த லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர்.

பாஜகவின் ஆட்சியில் லெனின் சிலை எதற்கு என கேள்வி எழுப்பும் பாஜகவினர், சிலை அகற்றத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் இதுதான் பாஜக-ஆர்.எஸ்.எஸின் உண்மை முகம், மூன்றாம் தர அரசியல் செய்கிறது பாஜக என மார்க்சிஸ்ட் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் ததகதா ராய், முந்தைய அரசின் செயல்பாடுகளை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மாற்றுவது வழக்கமான ஒன்று தான். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதற்கு முன்பும் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு பதவியேற்ற போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை அகற்றப்பட்டது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">What one democratically elected government can do another democratically elected government can undo. And vice versa <a href="https://t.co/Og8S1wjrJs">https://t.co/Og8S1wjrJs</a></p>&mdash; Tathagata Roy (@tathagata2) <a href="https://twitter.com/tathagata2/status/970713913011646465?ref_src=twsrc%5Etfw">March 5, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

பாஜகவின் அத்துமீறலை நியாயப்படுத்தும் விதமாக ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!