நான் பேசுவதற்கு நிறைய உள்ளது...! ஆனால் நான் பேசக்கூடிய மன நிலையில் இல்லை.- திருச்சி சிவா வேதனை

By Ajmal Khan  |  First Published Mar 16, 2023, 2:33 PM IST

என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளதாக திருச்சி சிவா வேதனையோடு தெரிவித்துள்ளார்.


திமுக நிர்வாகிகள் மோதல்

திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டிற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த டென்னிஸ் மைதானத்தை அமைச்சர் கேஎன் நேரு நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா அழைக்கப்படவில்லை என்றும், அவரது பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் சிவாவின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் முடிந்துள்ளது. இந்த வன்முறையில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காவல்நிலையில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது கே.என் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Latest Videos

இதை மட்டும் செயல்படுத்தினால் கடலூர் மாவட்டத்தின் அழிவு வேகமாக தொடங்கிவிடும்.! கதறும் அன்புமணி

தனி மனிதனை விட கட்சி பெரிது

இந்தநிலையில் இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவோடு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன். எனது வீட்டிலும், காவல்நிலையத்திலும் நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான  கட்சிக்காரன், தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான்.

மன சோர்வில் உள்ளேன்

இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.  நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன், மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லையென திருச்சி சிவா வேதனையோடு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றி 8 மாசம் ஆச்சு!அபராதத்தோடு தள்ளுபடி பண்ணுங்க-ஓபிஎஸ்க்கு செக் வைக்கும் இபிஎஸ்

click me!