திருச்சியே 2-வது தலைநகருக்கு பொருத்தமானது... திமுகவில் இருந்து எழுந்த முதல் குரல்..!

By vinoth kumarFirst Published Aug 20, 2020, 6:10 PM IST
Highlights

தமிழ்நாட்டின் 2-வது தலைநகராக அறிவிக்க எல்லா வகையிலும் திருச்சி மாவட்டம்தான் பொருத்தமானதாக இருக்கும் என திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

தமிழ்நாட்டின் 2-வது தலைநகராக அறிவிக்க எல்லா வகையிலும் திருச்சி மாவட்டம்தான் பொருத்தமானதாக இருக்கும் என திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

திமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் உருவப்படத்துக்குக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ்நாட்டின் 2-வது தலைநகர் என்பதற்கு திருச்சி மட்டுமே பொருத்தமானது. திருச்சியை தலைநகராக்க எம்.ஜி.ஆர் எடுத்த முடிவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. திருச்சி மாவட்டம் அனைத்து உள்கட்டமைப்புகளும் கொண்ட பகுதி. முன்பெல்லாம் திருச்சியில் இருந்து சென்னை செல்ல 7 அல்லது 8 மணி நேரமாகும். ஆனால், இப்போது மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும். அதேபோல், திருச்சியில் இருந்து மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் குறைந்த பயண நேரத்தில் செல்ல முடியும்.

மேலும், வேளாண்மை உட்பட அரசின் 10 அல்லது 12 துறைகளை நிர்வகிக்கும் வசதி திருச்சி மாவட்டத்தில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் 2-வது தலைநகராக அறிவிக்க எல்லா வகையிலும் திருச்சி மாவட்டம்தான் பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என திமுக தரப்பில் முதல் குரலாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

click me!