திருச்சி மாநாட்டில் சசிகலா, டிடிவி. தினகரன் பங்கேற்பா? ட்விஸ்ட் வைத்து பேசிய ஓபிஎஸ் தரப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 24, 2023, 7:47 AM IST

அதிமுகவின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது.


அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

திருச்சியில் மாநாட்டு மைதானத்தில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன், வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது  67 ஆண்டுகளுக்கு பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. இது வரலாறு படைக்கும் மாநாடாக இருக்கும். காவல் துறையினர் நல்ல முறையில் பாதுகாப்பு அளித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

அதிமுகவில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை. எம்ஜிஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் என கேட்ட போது அதிமுகவின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்கு தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள் என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்தார். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தான் பொதுக்குழு யாருக்கு பெருபான்மை என பார்ப்பார்கள். ஆனால், குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையை தான் எம்ஜிஆர் கொண்டு வந்தார். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது.

அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல. திருச்சியில் இன்று நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் பங்கேற்பு குறித்து தற்போது உறுதியாக எதுவும் கூற முடியாது. ஒரு கட்சியிலிருந்து மற்றொருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம். அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓபிஎஸ்க்கு இருக்கிறதா என்பதை  மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் என்றனர். 

click me!