புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வைத்த வன்னி அரசு!

By sathish kFirst Published Dec 13, 2018, 11:12 AM IST
Highlights

புதுமணத் தம்பதிகளுக்கு தனது வீட்டில் விருந்து வைத்து சிறப்பித்துள்ளார் விசிக வன்னி அரசு.

நாட்டையே உலுக்கிய ஒரு வீடியோ ஒன்று இரண்டு ஆண்டுக்கு முன்பாக  வீடியோ  சமூக வலைதளங்களில் உலா வந்தது. வேற்று ஜாதியை சேர்ந்த ஒருவரை மணந்த காரணத்தினால் புதுமண  தம்பதியர்களை பட்டப்பகலில் கூலிப்படை  வெட்டி சிதைத்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்தார் ஷங்கர், ஆனால் கௌசல்யா வெட்டு காயங்களுடன் உயிர் பிழைத்தார். கணவனைக் கொன்றவர்கள் பெற்றோர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடிய கவுசல்யா தண்டனையும் வாங்கி கொடுத்தார்.

சங்கரின் கொலைக்குப் பின்னர்  சாதி ஒழிப்புப் போராளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக் குரல்கொடுத்து வருகிறார். ஆணவக்கொலைக்கு எதிராகத் தனது உறவினர்களுக்கே தண்டனை பெற்றுக்கொடுத்தவர் கெளசல்யா. சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார்.  

கடந்த வாரம்  கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. கெளசல்யா `நிமிர்வு கலையகத்தின்  ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்துகொண்டார். இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார்.  இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். இதில் தம்பதிகள் இருவரும் உறுதிமொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினர். 

இந்நிலையில் புதுமணத்தம்பதிகளான கவுசல்யா சக்திக்கு தனது வீட்டில் விருந்து வைத்து சிறப்பித்துள்ளார் விசிக வன்னி அரசு. இந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அவர், தமிழர் பண்பாடு.. புது மண இணையருக்க விருந்து படைத்து உபசரித்தல்
தமிழர் பண்பாடு... கவுசல்யா- சக்தியோடு எங்கள் வீட்டில்
விருந்து.... இன்று இரவு என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பாக, இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்த பேரறிவாளன் தாய் அற்புதம்மா வந்திருந்தார்.

click me!