5 மாநில தேர்தல் முடிவுகள்... தமிழக முதல்வரின் அடேங்கப்பா கண்டுபிடிப்பு!!!

By vinoth kumarFirst Published Dec 13, 2018, 10:42 AM IST
Highlights

5 மாநில தேர்தலில் பாஜக கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்தார். 109 இடத்திற்கும், 114 இடத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

5 மாநில தேர்தலில் பாஜக கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்தார். 109 இடத்திற்கும், 114 இடத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் சென்னையில் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டியளிக்கையில் கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து நிதி தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டிருக்கிறோம். எவ்வளவு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து கர்நாடகா அரசு செயல்படுகிறது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறோம். 

காவிரியில் உபரி நீரை தேக்குவதாக சொல்லி கர்நாடகா அரசு கபினி அணை கட்டியது. அதற்கு பிறகு ஹேமாவதி அணை கட்டப்பட்டது. இப்படி அணைகள் கட்டியதால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டுவதற்கு முன் தமிழகத்தில் டெல்டா பாசன பகுதிக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது எனவும் முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். 

இந்நிலையில் மேகதாது அணை கட்டினால் இனி எப்படி தண்ணீர் கிடைக்கும். ஒட்டு மொத்த தமிழகம் பாலைவனமாகி விடும். காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். 5 வார காலத்தில் பதில் வழங்கவேண்டும் என கர்நாடகா அரசு மற்றும் மத்திய நீர் ஆணையத்தை கேட்டிருக்கிறோம். நடந்து மடிந்த 5 மாநில தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழு்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 109 இடத்திற்கும், 114 இடத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறியுள்ளார்.

click me!