நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இணையும் அதிமுக- அமமுக !! பின்னணியில் அமித்ஷா மகன்!!

By Selvanayagam PFirst Published Dec 13, 2018, 9:56 AM IST
Highlights

தற்போது எதிரும்  புதிருமாக உள்ள அதிமுகவும், அமமுகவும்  விரைவில் இணையப் போகிறது என்றால் நம்புவீர்களா ? ஆனால் அதுதான் உண்மை. பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா இதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

இதையடுத்து அதிமுக - அமமுக இணையும் என்பதற்கான பல  அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “அதிமுக - அமமுக விரைவில் இணையும் என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார்.

யாரும்  அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் ஜெயகுமார்கூட இமயமலை - காளான்’ என்று உவமை சொல்லி கிண்டல் செய்தார். தற்போது வெளிவரும் தகவல் அவருக்கே ஷாக் ரகம் தான் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லி சென்ற தினகரனை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து அதிமுக - அமமுக இணைப்பு பற்றிப் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து  கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷா மகன் ஜெய் ஷா, தினகரனைச் சந்தித்து பேசியுள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  அமமுக -அதிமுக இணையுங்கள். கட்சி உங்களிடம் இருக்கட்டும். ஆட்சி எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கட்டும். அமைச்சரவையில்  சில மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் பிரிந்திருப்பதால் திமுகவுக்குத்தான் பலம் கூடும் என்று அமித் ஷாவின் தகவலை அவரது மகன் தினரனிடம் விளக்கி சொல்லியுள்ளார்..

இதற்கு முன்னோட்டமாக டி.டி.வி. அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு வருமானம் வரும் வகையில் இரண்டு குவாரிகள்  உடிவேசயஉவ கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வருமான வரித்துறை மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகளும் இணைப்புக்கான நெருக்கடிதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எது எப்படியோ அமமுக- அதிமுக  விரைவில் இருக்கும் என நம்பப்படுகிறது.

click me!