மக்களை இடையூறு செய்யலாமா? அரசுக்கு சப்போர்ட் செய்யும் பாஜக..!

 
Published : Jan 05, 2018, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
மக்களை இடையூறு செய்யலாமா? அரசுக்கு சப்போர்ட் செய்யும் பாஜக..!

சுருக்கம்

Traffic workers struggle is not right to hit people

மக்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மாநிலம் முழுவதும் 1.43 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன. 

இதுகுறித்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 

இதில் தமிழக அரசு சார்பில் மூன்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 2.57% ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 2.44 ஊதிய உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சு நடத்தலாம் 2.37 % ஊதிய உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த மூன்று யோசனைகளில் ஒன்றை முடிவு செய்வது பற்றி தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் நேற்று அமைச்சருடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 

இதனால் நேற்றிலிருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு சரியாக கையாண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் மக்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!