ஜெ எழுந்து டான்ஸ் ஆடுவாரா.???? – டிராபிக்கின் ‘அநாகரீக பேச்சு’

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 01:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஜெ எழுந்து டான்ஸ் ஆடுவாரா.???? – டிராபிக்கின் ‘அநாகரீக பேச்சு’

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அதிர்ச்சிகரமான விரும்பத்தகாத பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார் டிராபிக் ராமசாமி.

இந்தநிலையில் நேற்று அவர், முதலமைச்சர் ஜெயலிலதாவை சந்திக்க முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் தலைக்கேறிய டிராபிக் ராமசாமி தமிழக காவல்துறை குறித்தும், அரசு அதிகாரிகள் குறித்தும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறித்தும்,சகட்டு மேனிக்கு தான் தோன்றி தனமாக பேசி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் நிதானமாக நாளிதழ் செய்திகளை மேற்கோள் காட்டி பேசும் டிராபிக் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்து கெட்ட வார்த்தைகளால் காவல்துறையினரை ஏசுகிறார்.

மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டிளித்து கொண்டிருந்த பொன்னையனை தொலைக்காட்சியில் பார்த்து கோபமடைந்த டிராபிக் அப்பட்டமான பொய்களை பொன்னையன் கூறுவதாகவும், அப்படி முதலமைச்சர் நன்றாக இருந்தால் எழுந்து டான்ஸ் ஆட வேண்டியது தானே என அநாகரீகமான முறையில் பேசினார்.

டிராபிக்கின் இந்த அநாகரீக பேச்சு பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உண்மையை மூடி மறைப்பதாகவும், முறைகேடாக கார் பார்கிங் இடத்தை அரசிடம் பெற்றுள்ளதால் இவ்வாறு அவர்கள் செய்வதாகவும் டிராபிக் ராமசாமி கூறுகிறார்.

எது எப்படியோ, மக்களுக்கு நல்லது செய்வது என்றாலும் கூட இவரை போன்ற சமூக ஆர்வலர்கள் மிக முக்கியமான தலைவர்கல் பற்றி கருத்து தெரிவிக்கும் போதும் வெயில் மழை பாராது வேலை செய்யும் காவல்துறையினர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதும் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.

டிராபிக் ராமசாமியின் இந்த ஆவேச கண்ணாபின்னா பேச்சு காவல்துறையினர் மற்றும் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?