
ஜெயலலிதா கைரேகை வைத்ததில் தேர்தல் ஆணைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி நான்கு வேட்புமனுக்களையும் தள்ளுபடி செய்ய கோரி டிராபிக் ராமாசாமி புது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
அரவகுறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா வேட்புமனுதாக்கல் படிவத்தில் கைரேகை பதிவு செய்துள்ளார்.
படிப்பறிவு இல்லாத நபர்களே பொதுவாக கைரேகை வைப்பார்கள், ஆனால் அதிமுக பொது செயலாளர் படிப்பறிவு கொண்டவர். மேலும் இவர் இதுவரை எதிலும் கைரேகை வைத்தது இல்லை. இந்த நிலையில் வேட்புமனுவில் கைரேகை பதிவு செய்திருப்பது நம்பகதன்மை கிடையாது.
மேலும் வேட்புமனுதாக்கலில் கைரேகை பதிவு செய்வதற்கு பல சட்டவிதிமுறைகள் உள்ளது. அதன்படி வேட்புமனுவில், கைரேகை பதிவு செய்யும்போது, தேர்தல் ஆணைய அலுவலர்கள், நீதித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகிய 3 பேர் முன்னிலையில் தான் கைரேகை பதிவு செய்யவேண்டும், மேலும் அவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளது.
இவற்றை மீறி 3 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் கைரேகை பதிவு செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள கூடாது, 3 பேரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம், தமிழக கவர்னர், தமிழக அரசு ஆகிவற்றிக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த மனு மீதுநடவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.