வியாபாரிகளே கவலை வேண்டாம்.. உங்களை போலீஸ் தடுத்தால் ஒரு போன் போடுங்க போதும்... மாஸ் காட்டும் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published May 25, 2021, 1:19 PM IST
Highlights

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  

சென்னை தலைமைசெயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தோட்டக்கலை வேளாண்துறை கூட்டுறவு துறைகளுடன் மக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைக்கிறதா என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு  செய்தார். சென்னையில் 1670 வாகனங்களில் 1400 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விறபனை செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 4626 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினமானது காய்கறிகள் மிக குறைவான விலைக்கு  விற்பனை செய்யப்படுள்ளதாகவும். இது மக்கள் மத்தியில் பாராட்டுக்குரியதாக இருந்தது. மேலும் இவை நகரபுறங்கள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் எளிய முறையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

13,096 வாகனங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. காய்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக காய்கறி வண்டியை சுற்றி கூட்டமாக இருக்கிறார்கள். அதுகுறித்த கேள்விக்கு அதை கண்காணிப்பதற்கு என்று குழு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தடுத்து நிறுத்தினால் காய்கறி, பழ வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தரலாம். 044-4568 0200, 94999 32899 என்ற எண்களில் மூன்று சக்கர வாகனம், தள்ளுவண்டி வியாபாரிகள் புகாரளிக்கலாம். 

மேலும் சிறிய தெருக்களில் காய்கறிகள் எளிதாக கொண்டு செல்வதற்காக மூன்று சக்கர சைக்கள்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனாவால் கட்டுப்பத்தப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் காய்கறிகள் பழங்கள் வழங்கப்படுகிறது. தங்களுக்கு தேவையானவற்றை அவர்கள் வாங்கி கொள்ளலாம் என அமைச்சர் கூறியுள்ளார். 

click me!